தமிழகத்தில் இதுவரை 300க்கு மேற்பட்டோர் மனுத்தாக்கல் | தினகரன்

தமிழகத்தில் இதுவரை 300க்கு மேற்பட்டோர் மனுத்தாக்கல்

இன்று கடைசி நாள்

மக்களவை தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் இதுவரை 262 ஆண்கள், ஒரு திருநங்கை உட்பட 300க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இடைத்தேர்தலில் போட்டியிட 125 பேர் மனுதாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முடிவடைய உள்ளதால் வேட்புமனு தாக்கல் செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தென்சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அடையாறு மண்டல அலுவலக்த்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவபதி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர்,

மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன்,

தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் மகனை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

சேலம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜா அம்மையப்பன், அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணன்,

கோயம்புத்தூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நடராஜன்,தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, இவரை எதிர்த்து போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்,அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன், வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த்,

திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன்,

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி,

கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை, காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ் சத்யன்,

கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், இதே தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நடராஜன்,

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் ஹெச். வசந்தகுமார், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து ஹெச்.வசந்தகுமார் போட்டியிடுகிறார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார்.

தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி,திருச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன்,

சிதம்பரம் (தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன்,

ஈரோடு தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, கோவை தொகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் நடராஜன்,

பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர்,

திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன், அரூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ண குமார், மானாமதுரை சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கா. நவாஸ்கனி, அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பி.ஜே.பி. வேட்பாளர் நயினார் நகேந்திரன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.

இதேபோல் மற்ற தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எம்.கே. ஷாகுல் ஹமீட்


Add new comment

Or log in with...