Huawei P30 Lite 32MP Selfie கமெராவுடன் அறிமுகம் | தினகரன்

Huawei P30 Lite 32MP Selfie கமெராவுடன் அறிமுகம்

Huawei P30 Lite 32MP Selfie கமெராவுடன் அறிமுகம்-Huawei Introduce Huawei P30 Lite With 32MP Selfie Camera

Huawei P30 Lite 32MP Selfie கமெராவுடன் அறிமுகம்-Huawei Introduce Huawei P30 Lite With 32MP Selfie Camera

Huawei ஸ்மார்ட்ஃபோன்கள் தெரிவுகளில் புதிய தொடரான Huawei P30 Lite தொடர்பான அறிமுகம் கடந்த வியாழக்கிழமை உலக வர்த்தக மைய கட்டடத்தில் இடம்பெற்றிருந்தது. இலங்கையில் காணப்படும் Huawei வாடிக்கையாளர் தீர்வுகள் புத்தாக்கம் மற்றும் ஒன்றிணைப்பு அனுபவ நிலையத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

நடுத்தர வகைக்குரிய (Mid Range) இந்த ஸ்மார்ட்ஃபோன் சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளதுடன், Peacock blue, Midnight Black, Pearl white ஆகிய வர்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சாதனத்தில் Huawei புத்தாக்கங்களான FullView Display மற்றும் DewDrop திரை வடிவமைப்பு ஆகியன அடங்கியுள்ளன. Huawei தனது “See More, See Further” எனும் தொனிப்பொருளுக்கமைய புத்தம் புதிய P30 Lite Triple Camera வை கொண்டுள்ளதோடு, அதன் பிரதான லென்ஸ் 24MP ஆக அமைந்துள்ளதுடன், 8MP Ultra Wide Angle லென்ஸையும் கொண்டுள்ளது. பாவனையாளர்களுக்கு எந்தவொரு புகைப்படத்தையும், சாதனத்தில் உள்ளடக்கிக் கொள்ள இது உதவுகின்றது.

மேலும் இதில் 2MP ‘Bokeh’ லென்ஸ் ஒன்றும் அடங்கியுள்ளது. P30 Lite இல் காணப்படும் Hybrid Zoom ஊடாக 3x மடங்கு Zoom அனுபவம் சேர்க்கப்படுவதுடன், Hand-Held Super Night Zoom ஊடாக குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் தெளிவானதாக அமைந்திருக்கும். மேலும், selfie moments இல் சாதனத்தில் காணப்படும் 32MP Front Camera ஊடாக மேம்படுத்தப்பட்ட அனுபவமும் சேர்க்கப்படுவதோடு 3D அம்சமும் சேர்க்கப்படும்.

Huawei P30 Lite 32MP Selfie கமெராவுடன் அறிமுகம்-Huawei Introduce Huawei P30 Lite With 32MP Selfie Camera

இலங்கையில் Huawei சாதனங்களுக்கான தலைமை அதிகாரி பீற்றர் லியு கருத்துத் தெரிவிக்கையில், “எமது சாதனங்களுக்கு பரந்தளவு கௌரவிப்பு மற்றும் புகழ் கிடைத்துள்ளன. இதனூடாக இலங்கையில் முதல் தர ஸ்மார்ட்ஃபோன் நாமமாக Huawei உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய புத்தாக்கமான Huawei P30 Lite என்பது எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டு, உயர் தர ஸ்மார்ட்ஃபோன் அனுபவத்தை நுகர்வோர் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது. கட்டுப்படியாகும் விலையில் உயர் தர ஸ்மார்ட்ஃபோன் அனுபவத்தை சேர்ப்பதுடன், ஒப்பற்ற battery ஆயுள் மற்றும் சக்தி வாய்ந்த camera வினைத்திறனையும் வழங்குகிறது.” என்றார்.

Huawei P30 Lite 32MP Selfie கமெராவுடன் அறிமுகம்-Huawei Introduce Huawei P30 Lite With 32MP Selfie Camera

பிரதான புகைப்பட அனுபவத்துக்கு மதிநுட்பமான AI சேர்க்கப்படுகிறது. இது 22 வெவ்வேறு பொருட்கள் மற்றும் காட்சிகளை சுயமாக இனங்காணக்கூடியதாக அமைந்துள்ளது. பாவனையாளருக்கு ஒப்பற்ற வகையில் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. AI உள் வைக்கப்பட்ட முன்புற camera இல் Front Camera Master AI காணப்படுகிறது. இதனூடாக தன்னியக்க Camera சீராக்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, மொத்தமாக 8 வெவ்வேறு காட்சிகள் இனங்காணப்படும். மேலும், முன்புற Camera இல் காணப்படும் Group Photo Intelligence ஊடாக வெவ்வேறு பாலினத்தவர்கள் மற்றும் வயதைச் சேர்ந்தவர்கள் இனங்காணப்பட்டு, விசேடமாக வடிவமைக்கப்பட்ட செம்மையாக்கல் அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. P30 Lite இன் 4K Ultra High Definition வீடியோ ரெகோர்டிங் ஊடாக, Ultra-Wideலென்ஸ் மூலமான தெளிவான படங்களை எடுக்கக்கூடியதாக இருக்கும்.

Huawei P30 Lite 32MP Selfie கமெராவுடன் அறிமுகம்-Huawei Introduce Huawei P30 Lite With 32MP Selfie Camera

P30 Lite இன் 3340mAh battery ஊடாக சாதனத்தின் சிறந்த வினைத்திறன் உறுதி செய்யப்படும். Huawei Fast Charge தொழில்நுட்பத்தினூடாக 30 நிமிடங்களில் 41% வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். Huawei Kirin 710 ஊடாக மிருதுவான மற்றும் வேகமான செயற்பாடுகள் உறுதி செய்யப்படுவதுடன், தினசரி வினைத்திறன் மற்றும் வலுச் சிக்கனம் போன்றன உறுதி செய்யப்படுகின்றன.

மேலும், GPU Turbo 2.0 இனால் மிருதுவான, வேகமான மற்றும் சிறந்த கிரபிக் அனுபவங்கள் சேர்க்கப்படுவதுடன், ஒப்பற்ற கேமிங் செம்மையாக்கலும் சேர்க்கப்படுகிறது.

Huawei P30 Lite 32MP Selfie கமெராவுடன் அறிமுகம்-Huawei Introduce Huawei P30 Lite With 32MP Selfie Camera

P30 Lite இல் காணப்படும் super smart display ஊடாக, பரந்த 6.15” திரை அனுபவம் கிடைப்பதுடன், 84.1% க்கும் அதிகமான திரை விகிதத்தை கொண்டுள்ளதுடன், பாவனையாளருக்கு பரந்தளவு சௌகரியமான திரை அனுபவம் வழங்கப்பட்டுள்ளது.

Huawei இன் சிறந்த FHD+ திரை உடன், sRGB வர்ண வெளிப்பாட்டினூடாக பாவனையாளர்களுக்கு அழகிய வர்ண துல்லிய அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். P30 Lite என்பது selfie champion ஸ்மார்ட்ஃபோனாக அமைந்துள்ளது.

Huawei P30 Lite 32MP Selfie கமெராவுடன் அறிமுகம்-Huawei Introduce Huawei P30 Lite With 32MP Selfie Camera

இது Huawei EMUI 9.0 இயங்குதளத்தையும் (OS) பயனர் இடைமுகத்தையும் (UI) காணப்படுகிறது. பாவனையாளர்களுக்கு எளிமையான, உள்ளார்ந்த பாவனை அனுபவத்தை பெற்றுக் கொள்ள வழிகோலுவதோடு, இச்சாதனம் super-slim bezels களை கொண்டுள்ளதுடன், அழகிய symmetry, proffering maximized வசதி மற்றும் திரை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றுக்கிடையே சமநிலையை உருவாக்குகின்றது. பரந்த திரையினூடாக சமநிலையான உள்ளம்சங்கள் சேர்க்கப்படுவதுடன், அதிக நேரத்திற்கு சாதனத்தை கையாளக்கூடிய வாய்ப்பையும் வழங்குகிறது.

Huawei P30 Lite 32MP Selfie கமெராவுடன் அறிமுகம்-Huawei Introduce Huawei P30 Lite With 32MP Selfie Camera

இதில் காணப்படும் face unlock தொழில்நுட்பம் Artificial Intelligence இனால் வலுவூட்டப்படுகின்றது. பாவனையாளர்களுக்கு தமது தொலைபேசியை பார்வையால் சௌகரியமான முறையில் அன்லொக் செய்து கொள்ள முடியும் என்பதோடு, பின்புற கைவிரல் ரேகை உணரி ஊடாகவும் அன்லொக் செய்யலாம். இதன் மூலம் P30 Lite வேகமான மற்றும் பாதுகாப்பான வகையில் இயங்குவது உறுதி செய்யப்படுகிறது.

P30 Lite இன் விலை ரூ. 53,990 என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், Huawei அனுபவ நிலையங்கள், சிங்கர் விற்பனை நிலையங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட டயலொக் அக்ஸியாடா மற்றும் மொபிடெல் விற்பனை நிலையங்கள் போன்றவற்றினூடாக கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, தங்களது வாடிக்கையாளர்களுக்கு சலுகை   விலையில் தங்களது ஏனைய சாதனங்களையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...