பலாங்கொடை பெட்டிகல பகுதியில் மண்சரிவு அபாயம் | தினகரன்

பலாங்கொடை பெட்டிகல பகுதியில் மண்சரிவு அபாயம்

பலாங்கொடை பெட்டிகல பிரதேசத்தின் யக் தெஹிகந்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக பலாங்கொடை பிரதேச செயலாளர் ஹேமந்த பண்டார தெரிவித்துள்ளார்.  

இப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக கடந்த சில தினங்களாக மலைப் பகுதியிருந்து கற்கள் சரிந்துள்ளதாவும் தெரிவித்தார்.  

அபாயத்தையடுத்து முதற்கட்டமாக 13 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

யக்தெஹிகந்த பெளத்த விகாரை மற்றும் அபர் பலாங்கொடை தனியார் தோட்ட விடுதிகளில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  

(இரத்தினபுரி சுழற்சி நிருபர் 


Add new comment

Or log in with...