Friday, April 19, 2024
Home » இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 3,48,000 கோடி ரூபாவை எட்டியது
2023 ஜனவரி 01 முதல் நவம்பர் 30 வரையில்

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 3,48,000 கோடி ரூபாவை எட்டியது

by Gayan Abeykoon
December 29, 2023 8:28 am 0 comment

 

2023 ஜனவரி 01 ஆம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை, 3,48,000 கோடி ரூபா (10,878 மில்லியன் டொலர்) ஏற்றுமதி வருமானத்தை எட்டியுள்ளது.

அமெரிக்காவிடமிருந்தே அதிக ஏற்றுமதி வருமானத்தை இலங்கை பெற்றுள்ளது. இத்தொகை 2,504.82 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என பதிவாகியுள்ளது.

இலங்கையின் வர்த்தகப் பொருட்கள், ஐரோப்பிய ஒன்றியம், தெற்காசிய நாடுகள்,தென்கிழக்காசிய நாடுகள் சங்கம், பொதுநலவாய நாடுகள், ஆபிரிக்க நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை கடந்த நவம்பரில் 31,000 கோடி ரூபா (968.8 மில்லியன் அமெரிக்க டொலர்) வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானத்தை எட்டியுள்ளது மற்றும் இலங்கை சுங்கத்தினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பரில் இலங்கையின் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி 2022 இல் 4.4 சத வீதம் வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் நவம்பர் 2022 இல் அறிவிக்கப்பட்ட மதிப்புடன் ஒப்பிடுகையில் இது 2.67 சத வீதம் குறைந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் தைத்த ஆடைகள், தேயிலை, இரப்பர் தொடர்பான உற்பத்திப் பொருட்கள், தேங்காய் உற்பத்திப் பொருட்கள், வைர கற்கள் மற்றும் தங்க நகைகள், இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் உதிரிப் பாகங்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் மசாலாப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்கள், கடல் உணவுகள், அலங்கார மீன்கள், காய்கறிகள், பழங்கள், பிற ஏற்றுமதிப் பயிர்கள், பூக்கள் மற்றும் தழைகள், படகு உற்பத்திகள் மற்றும் பெற்றோலியப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு வருமானம் ஈட்ட முடிந்துள்ளது. இலங்கை தயாரிப்புகள் உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதோடு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இந்தியா, ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பெல்ஜியம், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், பங்களாதேஷ் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் முக்கிய இடம் வகிக்கின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT