கிழக்கில் அழிவடைந்துவரும் தமிழர் தொல்பொருள் சின்னங்கள் | தினகரன்

கிழக்கில் அழிவடைந்துவரும் தமிழர் தொல்பொருள் சின்னங்கள்

கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூறையாடப்பட்டும், அழிவடைந்தும் வருவதனால், அவற்றைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர். 

சங்கமன் கண்டி பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில், ஏராளமான புராதன சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில சின்னங்கள் கிறிஸ்துவுக்கு முன்னர் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், சில சின்னங்கள் கிறிஸ்துவுக்குப் பின்னர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை எனவும் அறியப்படுகின்றன.  வரலாற்றுத்துறை பேராசிரியர் எஸ். பத்மநாதன், இந்த தொல்லியல் சின்னங்கள் மேற்குறிப்பிட்ட காலங்களுக்குரியவைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.


Add new comment

Or log in with...