Friday, March 29, 2024
Home » சீமா பாலர் பாடசாலையின் 5ஆவது மாணவர் கலை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்

சீமா பாலர் பாடசாலையின் 5ஆவது மாணவர் கலை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்

by Rizwan Segu Mohideen
December 27, 2023 10:42 pm 0 comment

சீமா பாலர் பாடசாலையின் 5ஆவது மாணவர் கலை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை (26) சாய்ந்தமருது கமு/கமு/ ரியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 2013 ஆம் ஆண்டில் கல்விகற்று எதிர்வரும் 2014 ஆம் ஆண்டில் முதலாம் தரத்துக்குச் செல்லும் மாணவர்களின் விடுகை மற்றும் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுசரைணயுடன் நடைபெறும் இந்த பாலர் பாடசாலையின்5ஆவது மாணவர் கலை விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாரை மாவட்ட கட்டளை அதிகாரி E.R.K. எதிரிமுனி கலந்து கொண்டார்.

அவர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தாதவது;

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நடத்தப்படும் பாலர் கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியைகள் மிகவும் சிரதமப்பட்டு பணியாற்றி மாணவர்களின் அறிவு மற்றும் திறன்விருத்தியை மேம்படுத்துகிறார்கள். அவர்களுக்கு எழுத்தறிவையும் கற்றுக் கொடுக்கிறார்கள். அவர்களினுடைய    ஆளுமை விருத்தியை நாம் இந்த கலை நிகழ்வினூடாக கண்ணுற்றோம். அதற்காக அந்த ஆசிரியைகளையும் அவர்களினுடைய பணியையும் பாராட்டுகிறோம்.

எமது சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் இந்த பாலர் பாடசாலையில் மக்களின் பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு ஏனைய பாலர் பாடசாலைகளை ஒப்பிடுகையில் மிகக் குறைவான சேவையை கட்டணத்தை அறவிட்டு பாலர் பாடசாலைக் கல்வியை முன்னெடுத்து வருகிறார்கள்.

இந்த பாலர் பாடசாலை உங்களுடைய பிரதேசத்துக்குரிய பாலர் பாடசாலை. அதனை பாதுகாத்து மென்மேலும் அபிவிருத்தியடையச் செய்வது பெற்றோர்களாகிய உங்களது பொறுப்பாகும்.

அதேபோன்று இன்று இந்த மேடையில் கலைநிகழ்வுகளைச் செய்த எதிர்காலத்தில் நல்ல தலைவர்களாக வரக்கூடிய தனது ஆரம்பக்ல்வியை பிரதான பாடசாலைகளில் சேர்ந்து தொடங்கவுள்ள இந்த மாணவர்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்தார்.

பிரதம அதியின் உரையினைத் தொடர்ந்து மாணவர்களுக்கான சான்றிதழ், நினைவுச்சின்னம் மற்றும் பரிசில்களும் அதிதிகளால் வழங்கிவைக்கபபட்டன. இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது கமு/கமு/ ரியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ. அஸ்த்தர், சாய்ந்தமருது ஆஸிப் காட்சியரை உரிமையாளர் எஸ்.எச். ஜிப்ரி, சிவில் பாதுகாப்பு திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் எஸ். சுல்பிகார் ஆகியோரும் கௌரவ அதிதிளாக சிவில் பாதுகாப்பு திணைக்கள கல்முனை செயற்திட்ட அலுவலக பொறுப்பு உத்தியோகத்தர் ஏ.எம். சிமியோன் அப்புஹாமி, சாய்ந்தமருது பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவித்தி உத்தியோகத்தர்காளன வை. திருப்பதி மற்றும் என்.எம்.எஸ். சிறீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏ. மொஹமட் பாயிஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT