கோவிலில் திருட முற்பட்டவர் கைது | தினகரன்

கோவிலில் திருட முற்பட்டவர் கைது

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொல்ஸி தோட்டத்தின் மேற்பிரிவிலுள்ள கோவிலொன்றில் திருட முற்பட்ட குற்றச்சாட்டில், 65வயதுடைய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த கோவிலின் கதவை நேற்றுமுன்தினம் (15) உடைத்து, பெறுமதியான பொருட்களை திருட முற்பட்ட ஒருவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

இதனைத் தொடர்ந்து, குறித்த நபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருகின்றார்.

மேலும், இந்தச் சம்பவத்துடன் பலர் தொடர்புபட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, கடந்த 3 தினங்களில் லிந்துலை, நானுஓயா ஆகிய பொலிஸ் பிரிவுகளிற்குட்பட்ட பல பகுதிகளிலுமுள்ள இந்துக் கோவில்கள்  உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியல் பணமும், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களும் திருடப்பட்டுள்ளன.

இச்சம்பவங்கள் தொடர்பில் லிந்துலை மற்றும் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(ஹட்டன் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...