ஜப்பானில் வேலை தருவதாக கூறி மோசடி நிறுவனம் சுற்றிவளைப்பு | தினகரன்

ஜப்பானில் வேலை தருவதாக கூறி மோசடி நிறுவனம் சுற்றிவளைப்பு

ஜப்பானில் வேலை வாங்கி தருவதாக கூறி சட்டவிரோதமான முறையில் பல்வேறு நபர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்ட நிறுவனமொன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை பிரிவினர் நேற்றுமுன்தினம் சுற்றிவளைத்துள்ளனர்.  

பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு கிடைத்த இரகசிய தொலைபேசி தகவலொன்றையடுத்தே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.  

அதன்படி பத்தரமுல்ல றோயல் ப்ளாஸா கட்டடத்தொகுதில் இயங்கிவந்த இந்த நிறுவனம் சுற்றிவளைக்கப்பட்டதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டனர்.  

சந்தேக நபர்கள் பொலனறுவ, தலகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.  

இவர்களிடமிருந்து 13கடவுச்சீட்டுகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  

இவர்கள் இதுவரை 12இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.  

இதுதொடர்பான விசாரணைகளை வெ.வே. பணியகத்தின் விசாரணை பிரிவினர் மேற்கொண்டுவருவதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.  


Add new comment

Or log in with...