பண்டாரகமவில் 10மில்லியன் டொலர் முதலீட்டில் மருந்து உற்பத்தி நிலையம் | தினகரன்

பண்டாரகமவில் 10மில்லியன் டொலர் முதலீட்டில் மருந்து உற்பத்தி நிலையம்

பிரித்தானியாவின் பிலெக்ஸி கெயார் குழுமத்தின் உறுப்பு நிறுவனமான பிலெக்‌ஸி லங்கா (பிறைவட்) லிமிட்டட் இலங்கை முதலீட்டு சபையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய 10மில்லியன் அமெரிக்க டொலர் ரூபா செலவில் பண்டாரகமவில் நவீன மருந்து உற்பத்தி நிலையமொன்றை அமைக்கவுள்ளது. 

இந்த நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவின் பங்களிப்புடன் இடம்பெற்றது. மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த கருவிகளை உற்பத்தி செய்வதற்கு சகல வசதிகளையும் கொண்ட நிலையமாக இது காணப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளில் 90வீதமானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருப்பதுடன், இதனூடாக கணிசமான அந்நியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டுவர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இத்திட்டத்தின் ஊடாக 600பேருக்கு வேலைவாய்ப்புக்கள் ஏற்படவிருப்பதுடன், உள்ளூர் விநியோக நடவடிக்கைகள் யாவும் தனித்துவமான விநியோக முகவரான டெக்னோ மெடிக்ஸ் இன்டர்நஷனல் பிறைவட் லிமிடட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும்.  

2019ஆம் ஆண்டில் பிலெக்ஸி கெயார் 30வது வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகிறது. சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற பல்வேறு மருத்துவ உபகரணங்களை இது உற்பத்தி செய்து வருகிறது. உலகம் முழுவதிலும் 12 உப நிறுவனங்களைக் கொண்டிருப்பதுடன், 110ற்கும் அதிகமான நாடுகளில் இதன் உற்பத்திகள் காணப்படுகின்றன.   


Add new comment

Or log in with...