பிரேஸிலில் துப்பாக்கிச்சூடு; எண்மர் உயிரிழப்பு | தினகரன்

பிரேஸிலில் துப்பாக்கிச்சூடு; எண்மர் உயிரிழப்பு

பிரேஸிலிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5மாணவர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தச் சம்பவத்தில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் சாவ் பாலோவிலுள்ள பாடசாலையொன்றிலேயே நேற்று (13) இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

முகமூடி அணிந்த இருவர், பாடசாலையினுள் நுழைந்து மாணவர்கள் மீதும் பாடசாலை பணியாளர்கள் மீதும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 


Add new comment

Or log in with...