Home » கொழும்பில் குடிசை வாழ் மக்களுக்கு புதிய வீடுகள்
26 தோட்டங்களில் 61,000 மக்கள் வசிப்பு

கொழும்பில் குடிசை வாழ் மக்களுக்கு புதிய வீடுகள்

துரித வேலைத்திட்டம் ஆரம்பம்

by Gayan Abeykoon
December 28, 2023 7:22 am 0 comment

கொழும்பில் குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்கும் துரித வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள 26 தோட்டங்களில் 61,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும் அவர்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான புதிய யோசனை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு -செலவுத் திட்டத்தினூடாக நிறைவேற்றப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.

தோட்டங்களில் குடிசைகளில் வசிப்பவர்களுக்காக உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களின் உதவியுடன் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், இந்த வீடுகளில் மக்களை குடியமர்த்திய பின்னர் எஞ்சிய இடங்கள் முதலீட்டாளர்களுக்காக முதலீட்டு செயற்றிட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இந்த செயற்றிட்டங்களுக்காக முதலீட்டாளர்களின் யோசனையை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT