Rising camera உடன் விரைவில் OPPO F11 Pro அறிமுகம் | தினகரன்

Rising camera உடன் விரைவில் OPPO F11 Pro அறிமுகம்

Rising camera உடன் விரைவில் OPPO F11 Pro அறிமுகம்-Introducing Oppo F11 With Rising Camera

OPPO F தொடரில் புதிய அறிமுகமாக F11 Pro விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய கமரா கட்டமைப்பைக் கொண்டமையவுள்ள இந்த தெரிவு, முன்புறத்தே rising camera உடன் 48MP பின்புற கமராவையும் கொண்டிருக்கும். சிறந்த selfie அனுபவத்தை வழங்கும் F தெரிவுகளில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த F9 இல் காணப்படும் கண்கவர் அலங்கார வடிவமைப்புக்கு மேலாக, F11 Pro இல் panoramic திரை வடிவமைப்பு காணப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான மற்றும் ஒப்பற்ற அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

Rising camera உடன் விரைவில் OPPO F11 Pro அறிமுகம்-Introducing Oppo F11 With Rising Camera

Rising camera அலங்காரத்துடன் selfie செயற்பாட்டை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லல்
“எளிமை என்பதே நேர்த்தியின் இறுதி வடிவம்” எனும் டா வின்சியின் கூற்றுப்படி, F11 Pro இல் காணப்படும் உள்ளம்சங்களை விவரிக்கக்கூடியதாக இருக்கும். இதில் காணப்படும் ஒப்பற்ற 16MP முன்புற கமரா மேல் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனூடாக திரையின் bezel அளவு குறைக்கப்பட்டுள்ளதுடன், இயற்கையான selfie அனுபவத்தை வழங்கும் வகையில் தேவையான போது வெளியே தோன்றும். sliding கட்டமைப்புக்கு உதவும் வகையில் எந்தவிதமான notch களையும் இல்லாமல் செய்வதுடன், 16 MP முன்புற கமராவை மறைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் வெளிப்படையான வடிவமைப்பினால் சிறந்த டச் அனுபவம் வழங்கப்படுகிறது. இதில் காணப்படும் சிறந்த panoramic திரையினூடாக முன்புற கமராவை மறைத்து வைத்திருக்க முடிவதுடன், “notchless” ஆக திகழ்ச் செய்து கண்கவர் முழுத்திரை அனுபவத்தை சேர்க்கிறது.

பாரம்பரிய கையடக்க தொலைபேசிகளில் காணப்படும் அம்சங்களுடன் ஒப்பிடுகையில் இதில் அடங்கியுள்ள 6.53-அங்குலத் திரை மற்றும் 90.9% screen- to-body ratio ஊடாக பெரியளவிலான படங்களை எடுக்க முடிவதுடன், களிப்பூட்டும் அம்சங்கள் மற்றும் கேமிங் அனுபவங்களை பெறுவதற்கு அதிகளவு இடவசதியை கொண்டிருக்கும்;.

இளம் தலைமுறையினரின் விருப்பத்துக்குரிய கமரா கைபேசியான OPPO, எப்போதும் இளைஞர்களுக்கு தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள உலகையும் குறித்தான கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கும் வகையிலான புதுமையான கைபேசிகளையே வழங்கி வருகிறது. ஸ்மார்ட்ஃபோன் புகைப்படக்கலையில் மிகப் பிரபல்யமான சாதனமான OPPO, முதன் முதலில் selfie அம்சத்தை அறிமுகம் செய்திருந்ததுடன், படிப்படியாக அதை மேம்படுத்தியிருந்ததுடன், முன்புற கமராவின் திறனையும் உயர்த்தியிருந்தது.

இவ்வாறான புத்தாக்கமான செயற்பாடுகளின் காரணமாக, OPPO நாமத்தை “Selfie Expert” எனும் நிலைக்கு உயர்த்தியிருந்ததுடன், உலகின் அதிகளவு விரும்பும் நாமமாகவும் திகழச் செய்திருந்தது. இந்த கையடக்க தொலைபேசியின் ஒப்பற்ற selfie புகைப்பட அனுபவம், வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ்பெற்றுள்ளதுடன், OPPO இன் கீர்த்தி நாமத்தையும், ஆதிக்கத்தையும் மேம்படுத்தி ஒப்பற்ற “Selfie Expert” ஆக உயர்த்தியிருந்தது. OPPO தொடர்ச்சியாக புத்தாக்க அம்சங்களை மேம்படுத்தி, கண்கவர் F9 ஐ அறிமுகம் செய்திருந்தது.

இதில் முதன் முறையாக இரட்டை பின்புற கமரா அம்சம் உள்ளடக்கப்பட்டிருந்தது. F9 இல் அறிமுகம் செய்யப்பட்ட புரட்சிகரமான இரட்டை பின்புற கமரா தொழில்நுட்பத்துக்கு மேலாக, OPPO F11 இல் காணப்படும் அம்சங்கள் F தொடரை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதாக அமைந்திருக்கும். மேலும் OPPO நாமத்தை “Selfie Expert” என்பதிலிருந்து "Brilliant Portrait" எனும் நிலைக்கு கொண்டு செல்வதாக அமைந்திருக்கும்.

F11 மற்றும் F11 Pro ஆகியன ஒப்பற்ற ultra-clear night mode மற்றும் Color Mapping தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளன. OPPO இன் system-level optimization தீர்வானது, ஸ்மார்ட்ஃபோன் புகைப்படத்திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்வு சுயமாக படமெடுக்கும் சூழலை இனங்கண்டு அதை இலக்கு வைக்கப்பட்ட செம்மையாக்கலுக்கு உட்படுத்தும். Ultra-night mode இல், முகங்களை இனங்கண்டு, குறைந்த ஒளிக்கு ஏற்ற வகையில் சருமத்தின் வர்ணத்தை சீராக்கம் செய்யும். இது மதிநுட்பமான வகையில் noise அளவை குறைப்பதுடன், குறைந்த வெளிச்சத்தில் தெளிவான புகைப்படங்களை எடுப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களுக்கு மேலாக, OPPO F11 தெரிவுகள் பாவனையாளரின் அனுபவத்தை மேம்படுத்தி, பொதுவாக காணப்படும் பிரச்சினைகளான அதிகளவு வெப்பமடைதல், வேகம் குறைதல் மற்றும் பற்றரி ஆயுள்காலம் போன்றவற்றை நிவர்த்தி செய்வதாகவும் அமைந்திருக்கும்.


Add new comment

Or log in with...