பிரெக்ஸிட் விவகாரம்; 2ஆவது தடவையாகவும் தோல்வி | தினகரன்

பிரெக்ஸிட் விவகாரம்; 2ஆவது தடவையாகவும் தோல்வி

பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே முன்வைத்த உடன்படிக்கையுடன்  வெளியேறும் தீர்மானம், பிரித்தானியப் பாராளுமன்றத்தில இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் திட்டத்தை பிரதமர் தெரேசா மே கையாண்டு வருகின்றார். இதையிட்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன்  அவர் ஏற்படுத்திய உடன்படிக்கையை பிரித்தானியப் பாராளுமன்றம் நிராகரித்தது.

மேலும், உடன்படிக்கை இல்லாமல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையிலிருந்து வெளியேறும் திட்டத்துக்கு  தடை  போட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், புதிய உடன்படிக்கையை ஏற்படுத்த தெரேசா மேயை வலியுறுத்தினர். ஆனால், புதிய உடன்படிக்கைக்கு வாய்ப்பில்லையென ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

பிரெக்ஸிட் திட்டத்தின் கால அவகாசம் இம்மாதம் 29ஆம் திகதியுடன் முடிவதால்,  உடன்படிக்கை இல்லாமல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்நிலையில், உடன்படிக்கை  இல்லாத பிரெக்ஸிட் தொடர்பாக பிரித்தானியப் பாராளுமன்றத்தில் நேற்று (12) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 149 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதற்கமைய, பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மே முன்வைத்த பிரெக்ஸிட் தீர்மானம் இரண்டாவது தடவையாகவும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...