திமிங்கிலத்தின் வாய்க்குள் சென்று திரும்பிய ஆடவர் | தினகரன்

திமிங்கிலத்தின் வாய்க்குள் சென்று திரும்பிய ஆடவர்

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 51 வயது ஆடவர் திமிங்கிலத்தின் வாய்க்குள் சென்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்துள்ளார்.

ரெய்னர் சிகிம்ப் எனும் அந்த ஆடவர் கடல் உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுவருகிறார். சார்டின் மீன்களின் இடமாற்றத்தைக் கடலடியில் அவர் படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது சார்டின் மீன்களை விழுங்கியவாறு நீந்தி வந்த திமிங்கிலம் ஒன்று, சிகிம்பையும் விழுங்கியது.

அந்தத் திமிங்கிலத்தின் வாயின் வெளியே தமது கால்கள் தொங்கியதை அவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் நினைவுக்கூர்ந்தார்.

அந்தச் சம்பவத்தைச் சிகிம்ப்பின் மனைவியும், புகைப்படம் எடுப்பவரும் அதிர்ச்சியுடன் படகிலிருந்து கண்டுள்ளனர்.

தவறான உணவை உண்டுவிட்டதைச் சில விநாடிகளில் உணர்ந்த திமிங்கிலம், தனது வாயைத் திறந்து அவரை விடுவித்துள்ளது.

புல்லரிக்கவைக்கும் இந்தச் சம்பவத்துக்குப் பரவசமடைந்து, இப்போது சுறா மீன்களைத் தேடி மீண்டும் கடலடிக்குச் சென்றுள்ளார் சிகிம்ப்.

அடுத்த பிறவியில் திமிங்கிலமாகப் பிறக்கவேண்டும் என்பது தனது ஆசை என குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...