மடு வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டி | தினகரன்

மடு வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டி

மன்னார் குறூப் நிருபர்

மடு வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டியின் இறுதி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை(10) மாலை அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

மடு வலயக்கல்விப்பணிப்பாளர் கே.சத்தியபாலன் தலைமையில் இடம் பெற்றது.

கடந்த 07 ஆம் திகதி ஆராம்பமான போட்டியின் இறுதி நிழ்வில் விருந்தினர்களாக வவுனியா கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி கே.சுவர்ணராஜா,வடமாகாண உதவி கல்விப்பணிப்பாளர் ஆர்.ராஜசீலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மடு வலயக்கல்வி பணிமனைக்குற்பட்ட 51 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் குறித்த போட்டியில் கலந்துகொண்டிருந்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், வெற்றிக் கேடையங்கள் விருந்தினர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...