423 தங்க வளையல்களை கடத்த முற்பட்டவர் விமான நிலையத்தில் கைது | தினகரன்

423 தங்க வளையல்களை கடத்த முற்பட்டவர் விமான நிலையத்தில் கைது

ரூபா 2.15 கோடி (ரூ. 21,500,000) பெறுமதியான தங்க வளையல்களை கடத்த முற்பட்டவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரியைச் சேர்ந்த 28 வயதான இவர், கட்டாரிலிருந்து புறப்பட்ட QR 664 கட்டார் விமானத்தில் வந்துள்ளார். 

இன்று (11) காலை 10 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் வந்த, வெளிநாட்டு விமான சேவையொன்றில் பணிபுரியும் இலங்கைப் பணியாளரான இவர், 4.43 கிலோ கிராம் நிறையுடைய 423 தங்க வளையல்களை சட்டவிரோதமாக கடத்த முற்பட்டதால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...