14 மி. அ. டொலர் முதலீட்டில் லொஜிஸ்டிக் கேந்திர நிலையம் அமைக்க ஏற்பாடு | தினகரன்

14 மி. அ. டொலர் முதலீட்டில் லொஜிஸ்டிக் கேந்திர நிலையம் அமைக்க ஏற்பாடு

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமான லொகிபார்க் இன்டர்நஷனல் பிறைவட் லிமிடட் மற்றும் ஜோன் கீல்ஸ் லொஜிஸ்டிக் பிறைவட் லிமிடட் நிறுவுனத்தின் துணை நிறுவனமும் இலங்கை சந்தையில் பிரதான மூன்றாம் தரப்பு லொஜிஸ்டிக் சேவை வழங்குனரமான நிலையமொன்றை முதுராஜவெல பகுதியில் நிறுவ முன்வந்துள்ளன.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கிரிஷான் பாலேந்திரா, குரூப் நிதி பணிப்பாளரும் பிரதி தலைவருமான கிஹான் கூரே மற்றும் பலரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.  

மதிப்பிடப்பட்ட 14 மில்லியன் அமெரிக்க டொலர் மில்லியன் முதலீட்டுடனும், 230,000 சதுர அடிக்கும் அதிகமான நிலப்பரப்பிலும் நிறுவப்படவுள்ள லொஜிபார்க் இன்டர்நஷனல் இன்டகிரேடட் லொஜிஸ்டிக் நிலையத்தின் செயற்பாடுகள் 2020 மார்ச் மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதனூடாக சுமார் 40,000 கியூபிக் மீற்றர் களஞ்சியப்படுத்தல் திறனை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மாதாந்தம் 300,000 கியூபிக் மீற்றரைவிட கையாளக்கூடிய திறனையும் கொண்டிருக்கும். பல் துறைசார் களஞ்சியப்படுத்தல் பகுதிகளுக்கு மேலாக, இந்த நிலையத்தில் பல்-வரிசையான, பெறுமதி சேர்க்கப்பட்ட சேவை பகுதிகள் காணப்படும், இவற்றினூடாக வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பொருட்கள், ஆடை உற்பத்தித் துறை, இலத்திரனியல், இரசாயன பொருட்கள், உராய்வு நீக்கி எண்ணெய்கள், தொலைத்தொடர்பாடல், பழுதடையும் பெருட்கள் மற்றும் வியாபார பொருட்கள் போன்ற துறைகளுக்கு சேவைகளை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். 

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் போக்குவரத்து துறை தனது 3PL பிரிவான JKLL ஊடாக வெவ்வேறு துறைகளுக்கு சேவையாற்றி வருகிறது.

இதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளின் துறைசார் முன்னோடிகள் உள்ளடங்கியுள்ளனர்.

சிறந்த வசதி உட்கட்டமைப்பு, களஞ்சிய முகாமைத்துவ கட்டமைப்புகள், களஞ்சியப்படுத்தல் தீர்வுகள் மற்றும் கையாளல் சாதனங்கள் போன்றவற்றினூடாக நிறுவனத்தினால் உயர் மட்ட உலர் மற்றும் குளிர் லொஜிஸ்டிக் நிலையங்கள் செயற்படுத்தப்படுகின்றன.    


Add new comment

Or log in with...