SLIIT பட்டக் கற்கைகளுக்கு விண்ணப்பங்கள் கோரல் | தினகரன்

SLIIT பட்டக் கற்கைகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்

வைப்பக படம்

உயர்கல்வித் துறையில் கணிசமான பங்களிப்புச் செலுத்திவரும் மாலபே SLIIT கல்வியகம் இந்த வருடத்துக்கான இளமானி பட்டக் கற்கை நெறிகளுக்கு பதிவுகளை ஆரம்பித்துள்ளது.

கணினி, பொறியியல், கல்வி, கட்டடக்கலை, மனோதத்துவம், நில அளவையியல், சட்டம், தாதியியல் மற்றும் சுற்றுலா போன்ற பலதுறைகளில் பட்டக் கல்விகளைத் தொடர விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

SLIIT கல்வியகத்தின் அனைத்து பட்டக்கல்விகளும் பல்கலைக்கழக ஆணைக்குழு மற்றும் கல்வியமைச்சின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2018 ஆம் ஆண்டில் உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களுக்கும் அவர்களின் பெறுபேறுகளுக்கு அமைய புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளது. 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த SLIITகல்வியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் உபதலைவருமான பேராசிரியர் லலித் கமகே,‘ SLIIT கல்வியத்தின் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் வாழ்க்கையை தரமிக்கதாய் அமைத்துக்கொள்ள வழிக்காட்டப்படுகிறது’ என்றார்.

SLIIT கல்வியகத்தில் உயர்தர கல்வி வழங்கப்படும் அதேசமயம், மாணவர்களுக்கான தொழில்வாண்மை மற்றும் நட்புமிக்க சூழ்நிலைகளுடனான கல்வியறிவு வழங்கப்படுகிறது.

மாணவர்களின் எதிர்கால தொழில்வாய்ப்புகளை விருத்தி செய்யும் பொருட்டு பாடத்திட்டத்திற்கும் திறன்விருத்திக்கும் இடையே ஓர் இணைப்பை ஏற்படுத்துவதனூடாக மாணவர்களின் தொழில்வாழ்க்கைக்கு எந்நேரமும் உறுதுணையாகத் திகழ்கிறது என்றார்.

US, UK அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் தமது இளமானி கற்கைநெறிகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்கான வசதிகளை தமது அதிதிறமைமிக்க மாணவர்களுக்கு SLIIT கல்வியகம் ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

மேலும் அங்கிருக்கும் உயர்தரமிக்க கல்வி வழங்குனர்களான தமது பங்குதார பல்கலைக்கழகங்களின் ஊடாகவும் மாணவர்கள் தமது இளமானி கற்கைநெறிகளைப் பூர்த்திசெய்ய விரும்புவார்களாயின் அவர்களை அங்கு மாற்றுவதற்கும் அல்லது இங்கிருந்து அந்த பல்கலைக்கழக பட்டங்களை பெறுவதற்கும் SLIIT கல்வியகம் உதவிபுரிகிறது.  


Add new comment

Or log in with...