இறப்பர் காணி ஒன்றில், சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்பு | தினகரன்

இறப்பர் காணி ஒன்றில், சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

நவகமுவ, கொடல்லேவத்த இறப்பர் காணி ஒன்றில், சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், கொலை குற்ற சந்தேகநபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இவர் கடந்த டிசம்பர் மாதம் சபுகஸ்கந்த கல்வலவில் கொலை செய்யப்பட்ட, தனுஷ்கா சஞ்சீவ "மன்னா" என்பவரின் கொலை தொடர்பாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பிராசாத் கருணாரட்ன (37) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 6.55 பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இவரினுடைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து ரி 56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் சுடப்பட்ட மற்றும் சுடப்படாத ரவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இம் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


Add new comment

Or log in with...