பம்பலப்பிட்டி விபத்தில் சிக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி மரணம் | தினகரன்

பம்பலப்பிட்டி விபத்தில் சிக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி மரணம்

வைப்பக படம்

பம்பலப்பிட்டி பகுதியில் கடந்த 24ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி சரத் சந்திர, நேற்று இரவு 8.45மணியளவில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பொறுப்பதிகாரி பம்பலப்பிட்டி, காலி வீதயில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, டிபென்டர் வாகனம் ஒன்றால் மோதுண்டதால் இவ்விபத்து நிகழ்ந்தது. இதில் படுகாயமடைந்த இவர், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது, டிபெண்டர் வாகன சாரதி மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகன் ரசிக பண்டார அளுத்கமகே உள்ளிட்ட 8பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் டிபெண்டர் வாகன சாரதி தவிர ஏனைய 7 பேரும் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...