இலங்கை சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க சுவீடனில் விசேட பிரசார நிகழ்வுகள் | தினகரன்

இலங்கை சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க சுவீடனில் விசேட பிரசார நிகழ்வுகள்

இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பிரசார வேலைத்திட்டமொன்று சுவீடன் நாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

ஸ்டொக்ஹோல்ம் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம் இலங்கை-சுவீடன் வர்த்தக சங்கத்துடன் இணைந்து இரண்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. 

மார்ச் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் முதலீடுகள் தொடர்பான பிரசார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

நோர்போட்டன் நிர்வாகப் பகுதியின் தலைநகரான லுலோயாவில் இந்தப் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இப்பகுதியிலேயே அதிகமான தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம் காணப்படுகின்றன. 

மார்ச் மாதம் 3ஆம் திகதி 250 சுற்றுலாப் பயணிகளுடன் முதலாவது விமானம் இலங்கைக்குப் புறப்பட்டது. விமான செயற்பாட்டாளர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இவர்களை வழியனுப்புவதற்கு சுவீடனுக்கான இலங்கைத் தூதுவர் சுதந்த கணேகம ஆராய்ச்சி விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார். இதில் லுலோயா நகரின் மேயரும் கலந்துகொண்டிருந்தார்.   


Add new comment

Or log in with...