Home » சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை மாவட்ட புதிய நிர்வாக அங்குரார்ப்பண நிகழ்வு

சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை மாவட்ட புதிய நிர்வாக அங்குரார்ப்பண நிகழ்வு

by Gayan Abeykoon
December 28, 2023 7:01 am 0 comment

சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் கண்டி மாவட்ட புதிய நிர்வாக அங்குரார்ப்பண நிகழ்வு கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது​

சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் புதிய பணிப்பாளர் உமா மகேஸ்வரி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சர்வதேச ஐக்கிய கலாம் இலங்கைக்கான தலைவர் டொக்டர் ஸ்ரீ மான் கலந்துகொண்டு புதிய அங்கத்தவர்களை நியமிக்கும் நிகழ்வுக்கு ஆதரவு வழங்கினர்.

பாடசாலை இடை விலகிய மாணவர்களுக்கு உதவி செய்தல் மற்றும் வறுமைக்கோட்டில் வாழும் மக்களுக்கு உதவி செய்தல் என்பவற்றை இலக்காகக் கொண்டு இந்நிகழ்வு நடைபெற்றது.

(கம்பளை நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT