கொழும்பில் ஆயுபோவன் வெல்நஸ் மெடிகெயார் வைத்தியாசாலை | தினகரன்

கொழும்பில் ஆயுபோவன் வெல்நஸ் மெடிகெயார் வைத்தியாசாலை

முன்னணி மற்றும் பழமையான ஆயுர்வேத சிகிச்சை நிலையமான திகழும் காலி வைத்தியசேகர ஆயுர்வேத மருத்துவ குடும்பம் புதிய சிகிச்சை நிலையத்தை கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது. 

ஆயுபோவன் வெல்நஸ் மெடிகல் ஹொஸ்பிட்டல் நவீன வசதிகளுடன் கொழும்பு 08காசல் வீதி எனும் முகவரியில் அமைக்கப்பட்டுள்ளது. 

வைத்தியசாலையின் தலைமைப் பொறுப்பை மருத்துவ பணிப்பாளர் வைத்தியர் சந்தன வீரசிங்க வகிப்பதுடன், மருத்துவ சேவைகளை வழங்குவதில் 11ஆவது தலைமுறையைச் சேர்ந்தவராக திகழ்கிறார். 

சரும பிரச்சினைகள் (சோரியாசிஸ்), பெண்கள் தொடர்பான நோய்கள், மூலநோய், ஆண்மைக்குறைபாடு, கருக்கட்டாமை, உடைவுகள் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு விசேட சிகிச்சைகளை ஆயுபோவன் வெல்நஸ் மெடிகல் ஹொஸ்பிட்டல் கொண்டுள்ளது. குறுகிய காலப்பகுதியில் நோயாளி குணமடையச் செய்வது இந்த சிகிச்சை நிலையத்தின் விசேட அம்சமாகும்.  இங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் நம்பகத்தன்மை நிறைந்தவையாக காணப்படுகின்றன. வைத்தியசாலையில் வழங்கப்படும் சிகிச்சைகள் அனைத்தும் வைத்தியசேகர மருத்துவ தலைமுறைக்கு உரித்துடையதாக அமைந்துள்ளதுடன், நிறுவனத்தினால் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

எனவே நோயாளர்கள் மத்தியில் நீண்ட காலமாக குணமடையாமல் காணப்படும் நோய்கள் குணப்படுத்தப்பட்டு அவர்களின் உள மற்றும் உடல் ரீதியாக நிவாரணம் சேர்க்கப்படுகிறது. 

ஆயுபோவன் வெல்நஸ் மெடிகல் ஹொஸ்பிட்டலில் சிகை சிகிச்சைகளும் சரும குறைபாடுகள் தொடர்பான சிகிச்சைகளும் காணப்படுகின்றன.

இவற்றுக்கு, ஆயுர்வேத சிகிச்சை முறைகளுக்கு மேலாக, உலக தரம் வாய்ந்த சிகிச்சை முறைகளை பயன்படுத்துகின்றது. எனவே, நோயாளர்கள் தமது நோய்களை குணப்படுத்திக் கொள்வது பற்றி உறுதியுடன் திகழலாம்.   


Add new comment

Or log in with...