சிங்கப்பூருக்கான விமான டிக்கட்டுக்களை வென்ற கொமர்ஷல் வங்கி கடனட்டை உரிமையாளர்கள் | தினகரன்

சிங்கப்பூருக்கான விமான டிக்கட்டுக்களை வென்ற கொமர்ஷல் வங்கி கடனட்டை உரிமையாளர்கள்

2018ன் இறுதிக் காலாண்டில் கிரடிட் கார்ட்டுகளைப் பெற்றுக் கொண்ட கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிங்கப்பூருக்கான ஒரு சோடி விமான டிக்கட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. குலுக்கள் முறையில் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.  

தனது கிரடிட் கார்ட் தளத்தை மேம்படுத்தும் வகையில் வங்கி இந்த ஊக்குவிப்புத் திட்டத்தை அமுல் செய்தது. புதிய கிரடிட் கார்ட்டுகளைப் பெற்றுக் கொண்டவர்களே பரிசுகளையும் வென்றுள்ளனர். இவர்களோடு இந்த ஊக்குவிப்பு காலத்தில் புதிதாக இணை கார்ட்டுகளைப் பெற்றுக் கொண்ட பழைய வாடிக்கையாளர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். டெபிட் மற்றும் கிரடிட் கார்ட் பிரிவுகளில் ஏற்கனவே சந்தைப் பிரிவில் கொமர்ஷல் வங்கி தலைமைத்துவத்தைக் கொண்டுள்ளது.  

அதேபோல் விற்பனைப் புள்ளி பிரிவில் கிரடிட் கார்ட் பாவனை புதிய கார்ட் விநியோகம், வளர்ச்சி வீதத்தில் வேகம் என ஏனைய பிரிவுகளிலும் முன்னிலை வகிக்கின்றது. 

சிங்கப்பூருக்கான விமான டிக்கட்டுக்களை வென்ற சிலர் கொமர்ஷல் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி சனத் மனதுங்க (இடமிருந்து ஐந்தாவது) சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க (இடது மூலையில்) கார்ட் நிலையத் தலைவர் துஷித சுரவீர (வலது மூலை) ஆகியோருடன் காணப்படுகின்றனர்.   


Add new comment

Or log in with...