ஜோன் கீல் நிறுவனம் அரசுடன் இணைந்து ‘பிளாஸ்டிக் சக்கரம்’ நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம் | தினகரன்

ஜோன் கீல் நிறுவனம் அரசுடன் இணைந்து ‘பிளாஸ்டிக் சக்கரம்’ நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பிளாஸ்டிக் சக்கர நிகழ்ச்சித்திட்டத்தின் மேலுமோர் நிகழ்வாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள பத்து முக்கியமான பாடசாலைகளில் பிளாஸ்டிக் சக்கரத் தொட்டிகளை வைத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. இந்தக் கருத்திட்டம் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஆதரவுடன் 2019பெப்பரவரியில் ஆரம்பிக்கப்பட்டது. 

இந்தக் கருத்திட்டத்தின் கீழ் முதலாவது பிளாஸ்டிக் சக்கரத் தொட்டியை கையளிப்பதற்காக அண்மையில் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அரச அமைச்சர் அஜித் மான்னப்பெருமவுடன் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினதும்; கம்பஹா மாவட்டத்திற்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபையினதும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

இந்த முயற்சியானது, இலங்கையில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் மாசடைதலைக் கணிசமாக குறைப்பதில் ஊக்கியாக இருப்பதுடன், குறிப்பிடத்தக்களவில் மீள்சுழற்சி செய்யும் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் முக்கிய இடங்களில் இதனை விரிவுபடுத்துகின்றது. 2017ஜுலை மாதம் இந்தக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 18மெற்றிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் மீள்சுழற்சி செய்யப்பட்டுள்ளது.   இந்த நிகழ்வில் கௌரவ மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அரச அமைச்சர் அஜித் மான்னப்பெரும உரையாற்றுகையில் “ கம்பஹா மாவட்டத்தில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் மாசடைதலைத் தடுப்பதற்கு எதிராக போராடுவதற்கான இந்த முயற்சி மிக முக்கியமாது.

அதே சமயம் இளைஞர்களும் எதிர்கால தலைமுறையினரும் அவர்களுடைய சொந்த பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பாக பொறுப்பினை ஏற்றுக்கொள்வதற்கும் இதன் தாக்கத்தை குறைப்பதற்கு எவ்வாறு ஒன்றிணைந்து பணியாற்றவது என்பது தொடர்பாகவும் அறிவூட்டுதல் மிக முக்கியமானது” எனக் கூறினார்.  

இந்தக் கருத்திட்டத்திற்கான அனுசரனை எலிபன்ட் ஹவுஸினால் வழங்கப்பட்டதுடன், பிளாஸ்டிக் சக்கரத் தொட்டிகள் ரன்வலி பாலிகா, ஹோலி குறொஸ் பெண்கள் பாடசாலை மற்றும் யசோதரா பாலிகவுடன் ஆறு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டது.   


Add new comment

Or log in with...