அதிகாரப் பகிர்வு தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் இணக்கம் | தினகரன்

அதிகாரப் பகிர்வு தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் இணக்கம்

அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் தேர்தல் முறைமை குறித்து இணக்கப்பாடு ஏற்படவில்லை. எனினும், அதிகாரப் பகிர்வு தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பாரளுமன்ற அவைத் தலைவரும் கண்டி அபிவிருத்தி அரச முதலீட்டு மலையக உரிமைகள் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். 

இந்தவகையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் தலைமையிலான வழிநடத்தல் குழுவில் அனைவரும் இணக்கத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்..

கண்டி - கலகெதர தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள காபட் வீதியை நேற்று முன்தினம் (02) மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.    

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், அதிகாரப் பகிர்வு தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து அடுத்த வாரத்துக்குள் யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளதாக தெரிவித்த அமைச்சர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் தேர்தல் முறைமை குறித்து இணக்கப்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில், அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து ஒரு வாரத்திற்குள் அதிகாரப் பகிர்வு தொடர்பான யோசனையை முன்வைக்க உள்ளதாக லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.  

(எம்.ஏ.அமீனுல்லா)           


Add new comment

Or log in with...