Huawei யின் மடிக்கும் தொலைபேசி Mate X அறிமுகம் | தினகரன்

Huawei யின் மடிக்கும் தொலைபேசி Mate X அறிமுகம்

Huawei யின் மடிக்கும் தொலைபேசி Mate X அறிமுகம்-Huawei Introduced Mate X-Foldable Phone

கடந்தவாரம் (24) பார்சிலோனாவில் இடம்பெற்ற உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் Huawei நிறுவனம் மடிக்கக்கூடிய தொலைபேசியை அறிமுகம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Mate X என பெயரிடப்பட்டுள்ள இத்தொலைபேசி, முதலாவது 7nm கொண்ட 5G தொழில்நுட்பத்தைக் கொண்ட Kirin 980 Chipset புரசொசரை கொண்டுள்ளது.

Huawei யின் மடிக்கும் தொலைபேசி Mate X அறிமுகம்-Huawei Introduced Mate X-Foldable Phone

ஏனைய கையடக்க தொலைபேசி வழங்குனர்களின் தொலைபேசிகளிலும் பார்க்க இத்தொலைபேசி இரு மடங்கு 5G வேகத்தை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 1GB கொண்ட திரைப்படமொன்றை 3 செக்கன்களில் தரவிறக்கம் செய்யும் வகையில் இது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு சிம் அட்டைகளை பயன்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ள இத்தொலைபேசியில், ஒன்றில் 5G வலையமைப்பையும் மற்றையதில் 4G வலையமைப்பையும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடததக்கது.

4,500mAh மின்கலத்தைக் கொண்டுள்ள இத்தொலைபேசி, அதிவேகமாக சார்ஜ் (Fast Charging) செய்யக் கூடியதாகும்.

Huawei யின் மடிக்கும் தொலைபேசி Mate X அறிமுகம்-Huawei Introduced Mate X-Foldable Phone

மடிக்கப்பட்ட நிலையில் 6.38 அங்குலமானதாகவும் முற்றாக திறக்கப்பட்ட நிலையில் 8 அங்குலமானதாகவும் அதன் திரை அமைந்துள்ளது.

Leica கமெராக்களை கொண்ட இந்த தொலைபேசியில் பின்புற கமெராக்கள் மூலம் மடிக்கப்பட்ட நிலையில் செல்பி புகைப்படங்களை எடுக்க முடியும் என்பதால், முன்பக்கமாக கமெராக்கள் இன்றி முழுத்திரையும் எவ்வித தடங்கலும் இன்றி காட்சியளிக்கின்றது.

Huawei யின் மடிக்கும் தொலைபேசி Mate X அறிமுகம்-Huawei Introduced Mate X-Foldable Phone

40MP, 16MP, 8MP  கமெராக்களைக் கொண்ட இத்தொலைபேசியில், இரு பக்கங்களிலும் திரை காணப்படுவதன் காரணமாக, புகைப்படத்தை ஒருவர் எடுக்கும் போது, முன்னால் இருப்பவர் தொலைபேசியின் பின்புற திரையில் அப்புகைப்படம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதையும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் சம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்திய மடிக்கும் தொலைபேசி பற்றி பார்த்தோம். அது மடிக்கப்பட்ட நிலையில் உட்புறமாக அகன்ற திரையை கொண்டுள்ளதோடு, முன் பக்கமாக 4.6 அங்குல திரையையே கொண்டுள்ளது.

Huawei யின் மடிக்கும் தொலைபேசி Mate X அறிமுகம்-Huawei Introduced Mate X-Foldable Phone

ஆயினும் Huawei அறிமுகப்படுத்தியுள்ள இத்தொலைபேசி அது போலன்றி மூடப்பட்ட நிலையில் 6.6 அங்குல திரையை வெளிப்பகுதியில் கொண்டதாக அமைந்துள்ளது. இதன் காரணமாக மடிக்கப்பட்ட  நிலையில் முன்பகுதியில் மாத்திரமன்றி பின்பகுதியிலும் திரை கொண்டதாகவும் 5.4mm தடிப்பைக் கொண்டதாகவும், அமைகின்றது.

இளம் நீல (Interstellar Blue) நிறத்தில் மாத்திரம் தயாரிக்கப்பட்டு  8GB RAM மற்றும் 512GB உள்ளக நினைவகத்தைக் கொண்டு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள இத்தொலைபேசி, 2,299 அமெரிக்க டொலர் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதோடு, இவ்வாண்டின் நடுப்பகுதியில் சந்தைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...