Home » வவுனியாவில் 1200 பேருக்கு வெற்றிகரமாக நிறைவடைந்த கண்புரை சத்திர சிகிச்சை

வவுனியாவில் 1200 பேருக்கு வெற்றிகரமாக நிறைவடைந்த கண்புரை சத்திர சிகிச்சை

by mahesh
December 23, 2023 12:08 pm 0 comment

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் ஆரம்பமான 1200 பேருக்கான கண்புரை சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

மலேஷியா அலகா மற்றும் ஆனந்தா அறக்கட்டளைகள் இம்மனிதாபிமானப் பணிக்கு அனுசரணை வழங்கின.

அசிஸ்ட் ஆர்ஆர் மூலம் முழுமையாக நிதியளிக்கப்பட்டு, அசிஸ்ட் ஆர்ஆர் (யுகே & எஸ்எல்) மூலம் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது.

அசிஸ்ட் ஆர்ஆர் (யுகே & எஸ்எல்) அமைப்பின் சர்வதேச தலைவர் கலாநிதி அ.சர்வேஸ்வரன், இலங்கை தலைவர் பொறியியலாளர் ஹென்றி அமல்ராஜ் ஆகியோர் இப்பணியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள்.

இந்திய 3 அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் உள்நாட்டு 3 அறுவை சிகிச்சை நிபுணர்கள் இணைந்து 1200 அறுவை சிகிச்சைகளை முடித்துள்ளனர்.

நோயாளிகள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இந்த முகாம் மலேசியாவைச் சேர்ந்த அலகா மற்றும் ஆனந்தா அறக்கட்டளைகளால் அசிஸ்ட் ஆர்ஆர் மூலம் முழுமையாக நிதியளிக்கப்பட்டு, அசிஸ்ட் ஆர்ஆர் (யுகே & எஸ்எல்) மூலம் ஒருங்கிணைக்கப்பட்டது.

நோயாளிகளுக்கு உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. அசிஸ்ட் ஆர்ஆர் (யுகே & எஸ்எல்) இலங்கை இணைப்பாளர் எந்திரி ஹென்றி அமல்ராஜ் கூறுகையில், “இரண்டு கண்களும் பார்வையற்ற சில நோயாளிகளுக்கு நாங்கள் உதவி செய்துள்ளோம். அவர்கள் மீண்டும் உலகைப் பார்க்க முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தாராளமாக நன்கொடை வழங்கிய அலகா மற்றும் ஆனந்தா அறக்கட்டளைகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

சென்னையில் இருந்து வந்த சத்திரசிகிச்சை நிபுணர்களான டொக்டர் உதய்குமார் தியாகசுந்தரம், டொக்டர் ரகுபதி வடுகபாலயம், டொக்டர் நிசாந் மதிவண்ணன் மற்றும் 3 சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கும் (சிலாபம் DGH-ஐச் சேர்ந்த வைத்தியர் கசுன் குணவர்தன, வவுனியா DGH-ஐச் சேர்ந்த Dr. P. கிரிதரன், முல்லைத்தீவு DGH-ஐச் சேர்ந்த Dr. Nizma Razick) மற்றும் அவர்களின் குழுவினருக்கும் அவர்களின் தன்னலமற்ற சேவைகளுக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்றார்.

வி.ரி.சகாதேவராஜா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT