Home » இறக்குமதியான 365 பாசுமதி அரிசி மாதிரிகளில் 162 வகை நிராகரிப்பு

இறக்குமதியான 365 பாசுமதி அரிசி மாதிரிகளில் 162 வகை நிராகரிப்பு

பத்தலகொட ஆராய்ச்சி தர ஆய்வில் தெரிவிப்பு

by Gayan Abeykoon
December 21, 2023 9:30 am 0 comment

2021 முதல் தற்போது வரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்காக பரிசோதிக்கப்பட்ட பாசுமதி அரிசியின் 365 மாதிரிகளில் 162 மாதிரிகள் நிராரிக்கப்பட்டு ள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட தரத்துக்கு இவை, இணங்காதிருந்தமை பத்தலகொட ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த 365 மாதிரிகளில் 203 மாதிரிகள் மட்டுமே இறக்குமதிக்கு தரமானதாக இருந்தது. அப்போது, ​​இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு பாசுமதி அரிசி இறக்குமதி செய்யப்பட்டது.

2021 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசி மாதிரிகளின், தர அறிக்கையை வழங்குமாறு விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் பத்தலகொட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துக்கு அறிவித்தார். இதன்படி, மூன்று வருடங்களில் இந்தியாவிலிருந்து 109 பாசுமதி அரிசி மாதிரிகள் பத்தலகொட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதில், 68 மாதிரிகள் ஏற்கத்தக்கவையாக இருந்ததோடு , 41 மாதிரிகள் நிராகரிக்கப்பட்டன.

அந்த காலகட்டத்தில், பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்வதற்காக 214 அரிசி மாதிரிகள் சமர்ப்பிக்கப்பட்டன, அவற்றில் 121 மாதிரிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், 93 அரிசி மாதிரிகள் தரம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டன .

மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மற்ற நாடுகளிலிருந்து 42 அரிசி மாதிரிகள் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன, அவற்றில் 14 மாதிரிகள் பொருத்தமான தரத்தில் இருந்தன. அத்துடன், 28 மாதிரிகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பத்தலகொட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் அமைச்சருக்கு வழங்கிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT