Friday, March 29, 2024
Home » புதிய பாடசாலை தவணையில் வகுப்பு வட்டங்கள் கட்டாயம்

புதிய பாடசாலை தவணையில் வகுப்பு வட்டங்கள் கட்டாயம்

கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

by Gayan Abeykoon
December 21, 2023 8:33 am 0 comment

பாடசாலை தவணை ஆரம்பமாகி இரண்டு வாரங்களுக்குள் சகல பாடசாலைகளிலும் வகுப்பு வட்டங்களை ஒழுங்கமைப்பதில் பாடசாலை பிரதானிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் மற்றும் வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர்களுக்கிடையில் பலமான தொடர்புகளை உருவாக்குவது இதன் நோக்கமாகுமென்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வருடம் பிறந்ததும் குறைந்தபட்சம் வகுப்புக்கள் மற்றும் தரங்கள் என்ற வகையில் பெற்றோர்களை அழைத்து, பிள்ளைகள் வகுப்பின் பொறுப்பாசிரியர் ஆகியோருக்கும் தெளிவுபடுத்தல் மேற்கொள்வது அவசியமாகும்.

அதற்கிணங்க அந்த வருடத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பிள்ளைகளின் ஒழுக்கம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை பாதுகாப்பது எவ்வாறு என்ற புரிந்துணர்வை பெற்றுக் கொடுக்கவேண்டும். இதற்கான சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாடசாலைகள் அடுத்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பித்தவுடன் கண்டிப்பாக அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் வகுப்பு வட்டத்தை ஒழுங்கமைக்க வேண்டும் என்ற பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.இதன் முன்னேற்றம் தொடர்பில் மாதாந்தம் மற்றும் வருடாந்தம் மீள்பார்வை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலமே, பாடசாலைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான தொடர்புகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியும்.

நாட்டில் நிலவிய கொவிட் காரணமாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் இருந்தது. அதனை மீண்டும் கொண்டுவரவேண்டும்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT