நடிகர் ஜெய் நடிக்கும் படங்களில் முதலில் வெளிவரப் போகும் ‘நீயா 2’ | தினகரன்

நடிகர் ஜெய் நடிக்கும் படங்களில் முதலில் வெளிவரப் போகும் ‘நீயா 2’

நடிகர் ஜெய் 'நீயா 2', 'கறுப்பர் நகரம்', 'பார்ட்டி', 'மதுர ராஜா' உட்பட அரை டஜன் படங்களில் நடிக்கிறார். இதில் எந்தப் படம் முதலில் வெளிவரப் போகிறது என்பதை அவர் தெரிவித்திருக்கிறார்.

"`நீயா 2' தான் முதல்ல ரிலீஸ் ஆகும். இதில் எனக்கு இரட்டை வேடம். ‘பலூன்’ படத்துல வர்றமாதிரி ரெண்டு கேரக்டருக்கும் சம்பந்தம் இருக்காது. ஒன்னு நிகழ்காலத்துல நடக்கிற கதை. அதில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்யும் கேரக்டர். எதிர்காலத்துல ஒரு கேரக்டரா வருவேன். பழைய `நீயா' படத்துக்கும் இதுக்கும் நேரடித் தொடர்பு இருக்காது. ஆனா அதோட பல ரெஃபெரன்ஸ் இதில் இருக்கும்.” என்று ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.  


Add new comment

Or log in with...