Friday, March 29, 2024
Home » வவுனிக்குளத்தில் 400 ஏக்கர் பயிர்கள் அழிவு

வவுனிக்குளத்தில் 400 ஏக்கர் பயிர்கள் அழிவு

by Gayan Abeykoon
December 21, 2023 1:00 am 0 comment

முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் பாலி ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக வவுனிக்குளத்தின் கீழான 1000 ஏக்கருக்கு மேலான நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பாலி ஆற்றுக்கரையோரங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த நெற்பயிர்ச்செய்கை பெரும் அழிவுகளை சந்தித்துள்ளது. இதேவேளை வவுனிக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்த 3000 ஏக்கருக்கு மேற்பட்ட மேட்டுப் பயிர்ச்செய்கை மழை வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளது. இதுவரை 25 கால்நடைகள் மழை வெள்ளத்தினால் உயிரிழந்துள்ளன. இதுதொடர்பான விபரங்களை கமநல சேவை நிலையங்களில் கமக்கார அமைப்புகளின் ஊடாக விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர். பயிர்ச் செய்கைக்கும் கால்நடை உயிரிழப்புகளுக்கும் இழப்பீடுகளை பெற்றுத் தருவதற்கு விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் கோரியுள்ளனர்.

முல்லைத்தீவு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT