‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி ! | தினகரன்

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி !

தனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து நீண்ட நாட்களாக பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக தயாரிப்பாளர் மதன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கும் இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் கதாநாயகி மெகா ஆகாஷ் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். இவர் திரையுலகில் 2017ஆம் ஆண்டு "லை" என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்பு தமிழில் ஒரு பக்கா கதை திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.


Add new comment

Or log in with...