Saturday, April 20, 2024
Home » இம்முறை 40,000 ஏக்கரில் பெரும்போக சோளச் செய்கை முன்னெடுப்பு
அநுராதபுரம் மாவட்டத்தில்

இம்முறை 40,000 ஏக்கரில் பெரும்போக சோளச் செய்கை முன்னெடுப்பு

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கள விஜயம்

by Gayan Abeykoon
December 21, 2023 8:35 am 0 comment

நுராதபுரம் கல்போத்தேகம பகுதியில் இம்முறை சோளச் செய்கை மிகவும் வெற்றிகரமாகவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாய அமைச்சின் மூலம் விவசாயிகளுக்கு (SAPP) திட்டத்தின் கீழ் 05 மாவட்டங்களில் 40,000 ஏக்கரில் இம்முறை பெரும்போக சோளச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த செயற்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் சோளச் செய்கைக்கு தேவையான வளங்களை இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனடிப்படையில் குறித்த பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க நேற்று முன்தினம் (19) களவிஜயம் ஒன்றை மேற்கொண்டு சோளச் செய்கையினை பார்வையிட்டதுடன் விவசாயிகளுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 20,000 விவசாயிகளுக்கு 1 ஏக்கர் வீதம் 20,000 ஏக்கரில் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அநுராதபுரம், மொனராகலை, பதுளை, ஹம்ந்தோட்டை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 40,000 ஏக்கர் சோளச் செய்கைக்கு ஒரு ஏக்கர் நிலம் பதப்படுத்துதல் உட்பட முதற்கட்ட செலவாக விதை, யூரியா உரம் என்பன இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக (TSP மண் உரம்) மற்றும் ( MOP பூந்தி உரம்) என்பன இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT