Home » மிகவும் விறுவிறுப்பான நேரடி போட்டியாக இடம்பெற்ற P&S Esports Contenders 2023

மிகவும் விறுவிறுப்பான நேரடி போட்டியாக இடம்பெற்ற P&S Esports Contenders 2023

by Rizwan Segu Mohideen
December 15, 2023 3:08 pm 0 comment

2023 நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய திகதிகளில் Gamer.LK இன் கூட்டாண்மையுடன் இடம்பெற்ற 4 வது வருடாந்த P&S Esports Contenders 2023 சுற்றுப்போட்டி மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்தமை தொடர்பில் பெரேரா அன்ட் சண்ஸ் பேக்கர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (P&S) பெருமையுடன் அறிவித்துள்ளது. இலங்கையின் மிகப் பாரிய விரைவு சேவை உணவகச் சங்கிலியின் வலுவூட்டலுடன் இடம்பெற்ற P&S Esports Contenders 2023 சுற்றுப்போட்டி, கணனி மூலமான இணைய விளையாட்டை ஊக்குவித்து வளர்ப்பது மட்டுமன்றி, முதற்தடவையாக LAN (புறநிலை) வடிவில் இடம்பெற்றமை இலங்கையில் கணனி மூலமான இணைய விளையாட்டுச் சமூகத்தைப் பொறுத்தவரையில் ஒரு புதுமையான அனுபவமாகும்.           

இதற்கமைவாக, பதுளை, அநுராதபுரம், இரத்தினபுரி, கண்டி மற்றும் பல பிரதேசங்கள் அடங்கலாக, நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டதுடன், 30 வகையான கணனி மூலமான இணைய விளையாட்டு அணிகளில் 1,800 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. Free Fire, PUBG MOBILE, FIFA 23, Kart Rider Drift, Mortal Kombat 1 மற்றும் Gamer.LK’s Cricket Sixes என ஆறு தலைப்பிலான போட்டிப் பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்குபற்றினர். நிகழ்வின் தனித்துவமான திருப்பமாக, அனைத்துப் போட்டிப் பிரிவுகளிலும் அதிகூடிய தங்கப் பதக்கங்களை வென்ற அணிக்கு “P&S Best Clan Award” என்ற மதிப்புமிக்க கௌரவம் அளிக்கப்பட்டதுடன், முதற்தடவையாக P&S வழங்கிய இவ்விசேட விருதை “MAXIMUM ESPORTS” பெற்று, இதனை முதன்முதலாகப் பெற்றுக்கொண்ட அணியாக சாதனை படைத்தது.            

கணனி மூலமான இணைய விளையாட்டுச் சமூகம் மற்றும் பல்வேறுபட்ட விளையாட்டு வகைகளுக்கு உத்வேகமளிக்கும் வகையில் “Level Up Café by P&S” என்ற விசேட நிகழ்வு முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது. இந்த நேரடி உணவகம் பல்வேபட்ட விசேட உணவு வகைகளுடன் விளையாட்டுக்கள், விளையாட்டுப் பாத்திரங்கள் மற்றும் விளையாட்டுக்கள் தொடர்புபட்ட கருப்பொருள்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கி, சுற்றுப்போட்டியின் விறுவிறுப்பிற்கு மேலும் அணிசேர்த்தது. Winner Winner Chicken Kottu, Booyah Veg Roll, Eclair of Eternity, மற்றும் Sub-Zero Iced Coffee போன்ற வியப்பூட்டும் புத்தூக்கிகள் மற்றும் சுவை விருந்துகள் இவற்றுள் அடங்கியிருந்தன.        

இலங்கை கணனி மூலமான இணைய விளையாட்டுக்கள் சங்கம் இச்சுற்றுப்போட்டியை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளதுடன், இதன் பெறுபேறுகள் தேசிய மட்ட வீரர்கள் தரப்படுத்தலுக்கு பங்களிப்பதுடன், இலங்கையில் கணனி மூலமான இணைய விளையாட்டுக்களின் முக்கியத்துவத்திற்கு மேலும் வலுச்சேர்த்துள்ளன. கணனி மூலமாக இணைய விளையாட்டுக்கள் இலங்கையில் விளையாட்டு அமைச்சால் பதிவு செய்யப்பட்ட ஒரு விளையாட்டாக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதை குறிப்பிடுவது முக்கியம் என்பதுடன், நாட்டில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற விளையாட்டுக்களில் ஒன்றாக மாறியுள்ளது.

பெரேரா அன்ட் சன்ஸ் பேக்கர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளரான கிஹான் பெரேரா கருத்து வெளியிடுகையில், “கணனி மூலமான இணைய விளையாட்டுக்கள் எமது நாட்டில் வளர்ந்து வருகின்ற ஒரு விளையாட்டாக மாறியுள்ளதுடன், எம்மத்தியிலுள்ள இளம் திறமைசாலிகள் இதில் பிரகாசிப்பதற்கான ஒரு மேடையை வழங்குவது எமக்கு கிடைக்கப்பெற்ற கௌரவமாகும். எமது இளைஞர்,யுவதிகளை வளர்த்து, அவர்களுக்கு உதவவேண்டியதன் முக்கியத்துவத்தை P&S தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளது. அவர்களே எமது எதிர்காலம் ஆகையால், அவர்கள் தமது அபிலாஷைகளுக்கு உந்துசக்தியளித்து, கனவுகளை நனவாக்கிக் கொள்ள உதவ வேண்டியது எமது பொறுப்பாகும். P&S அற்புதமான சுவை கொண்ட உணவு வகைகளை ஊக்குவிப்பது மட்டுமன்றி, சமூக மற்றும் ஊக்குவிப்பு உணர்விலும் அர்ப்பணிப்புடன் உள்ளது. ‘P&S Esports Contenders 2023’ நிகழ்வு இந்த அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகின்றது,” என்று குறிப்பிட்டார்.   

1902 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட பெரேரா அன்ட் சண்ஸ் பேக்கர்ஸ் லிமிட்டெட், இலங்கையில் அனைத்து இல்லங்களிலும் உச்சரிக்கப்படும் நாமமாக மாறியுள்ளதுடன், அதன் தயாரிப்புக்களை மகத்தான சுவை மற்றும் தரத்துடன் வழங்குவதற்கு பெயர்போனது. தற்போது, இலங்கையின் மிகப் பாரிய விரைவு சேவை உணவகச் சங்கிலியாக P&S தனித்துவம் பெற்றுள்ளதுடன், நாடளாவியரீதியில் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் தனது உணவகங்களைக் கொண்டுள்ளது.   

Gamer.LK இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான ரவீன் விஜயதிலக கருத்து வெளியிடுகையில், “கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய மற்றும் ஈடுபாடுகளை ஊக்குவிக்கும் வழிமுறைகளில் இலங்கையில் இளைஞர்,யுவதிகளை எட்டுவதில் பெரேரா அன்ட் சண்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதையிட்டு Gamer.LK மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றது. இலங்கையிலுள்ள கணனி மூலமான இணைய விளையாட்டுக்கள் சமூகம் ஆண்டுதோறும் வளர்ச்சி கண்டு வருவதுடன், இளைஞர்,யுவதிகள் மத்தியில் P&S வர்த்தகநாம தெரிநிலையில் பாரிய நல்விளைவுக்கு பங்களித்துள்ளது. இலங்கையில் கணனி மூலமான இணைய விளையாட்டுக்கள் நாட்காட்டியில் ஒரு முதன்மையான நிகழ்வாக இதனை மாற்றியமைத்துள்ள பெரேரா அன்ட் சண்ஸ் தலைமைத்துவ அணிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.     

P&S Esports Contenders 2023 ஆனது கணனி மூலமான இணைய விளையாட்டுக்களை வளர்த்து, கொண்டாடி, இலங்கையின் விளையாட்டுத் துறையில் ஒரு உள்ளங்கமாக மாற்றுவதில் P&S இன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றது. பல்வேறுபட்ட வாடிக்கையாளர்களுக்கு பூரிப்பான உணவு அனுபவங்களை வழங்கி, இளைஞர்,யுவதிகளுக்கு உதவி, அவர்களை வளர்க்கும் பாராம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல P&S ஆவலாக உள்ளது.   

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT