நயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் அடுத்த படம்..! | தினகரன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் அடுத்த படம்..!

நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இவர் அடுத்ததாக கொலையுதிர் காலம், மிஸ்டர். லோக்கல், விஜய் 63 ஆகிய தமிழ் படங்களிலும்,‘சைரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு படத்திலும், ‘லவ் ஆக்‌‌ஷன் டிராமா’ மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படங்களை முடித்த கையோடு நயன்தாரா ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிக்கிறார். நாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார் என தகவல் கசிந்துள்ளது. மேலும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரௌடி தான்’ படத்தில் நயன்தாரா நடித்தார். பிறகு அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. சில வருடங்கள் ஜோடி புறாக்களாக சுற்றிவந்த இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்களாம். இதனை நயன்தாராவே தெரிவித்துள்ளார்.

இதை பற்றி அவர் கூறியதாவது, தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய வெற்றி படங்களை கொடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி நான் 100 படங்களில் நடித்து முடித்த பின்னர் திருமணம் பற்றி முடிவெடுப்பேன் என நயன் கூறியதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. 


Add new comment

Or log in with...