Home » க.பொ.த. உ/தரத்துக்கு தகுதி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு
நெய்னாகாடு அல்-அக்ஸா பாடசாலையில்

க.பொ.த. உ/தரத்துக்கு தகுதி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

by Gayan Abeykoon
December 21, 2023 1:06 am 0 comment

நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலயத்தில் முதல் தடவையாக க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றி க.பொ.த. உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களை பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் அப்பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.பி.ஹிபத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இப்பாடசாலையில் தரம் ஒன்பதுவரை கல்வி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி க.பொ.த. சாதாரணதரம்வரை தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், முதல் தடவையாக க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மூன்று மாணவர்களில் இரண்டு மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

க.பொ.த. சா/த பரீட்சையில் சித்தி பெற்ற இரு மாணவர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன், உயர்தரம் கற்பதற்கான புலமைப் பரிசில்களும் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. 25 மாணவர்களுக்கு இதன்போது புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாலமுனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT