அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல் | தினகரன்

அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்

சிறைச்சாலையின் அலுகோசு வெற்றிடத்துக்கு மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எச்.எம்.என்.சீ. தனசிங்க தெரிவித்தார். 

அலுகோசு பதவிக்காக மூன்றாவது தடவையாகவே தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதற்கு முன்னர் அலுகோசு பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஆட்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும் அவர்கள் அப்பதவியை கைவிட்டுச் சென்றதன் காரணமாகவே மீண்டும் ஆட்தெரிவு இடம் பெறுவதாகவும் அவர் கூறினார். 

விண்ணப்பதாரிகள் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் இரண்டு சாதாரண சித்திகளுடன் கூடிய சித்திகளை கொண்டிருப்பதுடன் வயது 45இற்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டுமென்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். 

இப்பதவிக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் கவனத்திற் கொள்ளப்படுவரென்றும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.   


Add new comment

Or log in with...