Sunday, February 10, 2019 - 15:25
மொணராகலை, தணமல்வில பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று (10) நண்பகல் 12.20 மணியளவில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் 42 வயதான நபர் ஒருவர் பலியாகியுள்ளதோடு, 22 வயதான மற்றுமொரு நபர் காயமடைந்து அம்பாந்தோட்டையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், தணமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Add new comment