Home » India Vs South Africa 2nd ODI: இந்திய அணியை வீழ்த்தியது தென்னாஆபிரிக்கா

India Vs South Africa 2nd ODI: இந்திய அணியை வீழ்த்தியது தென்னாஆபிரிக்கா

- 1-1 என்ற கணக்கில் தொடர் சமனிலை

by Prashahini
December 20, 2023 12:08 pm 0 comment

தென் ஆபிரிக்க மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று (19) இடம்பெற்றது.

இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி.

இந்த வெற்றியின் மூலம் 1-1 என்ற கணக்கில் இந்த தொடர் சமனில் உள்ளது.

இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி, இந்தியாவை முதலில் துடுப்பாட்ட பணித்தது. 46.2 ஓவர்களில் 211 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது இந்தியா.

212 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆபிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி தொடக்க ஆட்டக்காரர்கள் 130 ஓட்டங்களுக்ளு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரீசா ஹென்ரிக்ஸ் 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய வான்டர் டூசன் 36 ஓட்டங்களில் வெளியேறினார்.

ஜோர்ஸி, 122 பந்துகளில் 119 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 42.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ஓட்டங்கள் எடுத்தது தென் ஆபிரிக்கா.

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 2ஆவது பந்திலேயே எல்பிடபள்யூ முறையில் விக்கெட்டானார். சாய் சுதர்ஷன் – திலக் வர்மா இணைந்து 11 ஓவர் வரை விக்கெட் இழப்பில்லாமல் கொண்டு சென்றனர்.

நந்த்ரே பர்கர் வீசிய 12ஆவது ஓவரில் திலக் வர்மா 10 ஓட்டங்களுடன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த கே.எல்.ராகுல் – சாய் சுதர்சஷனுடன் பாட்னர்ஷிப் அமைக்க இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடி காட்டிய சாய் சுதர்ஷனை, லிசாட் வில்லயம்ஸ் விக்கெட்டாக்கினார். 83 பந்துகளில் 62 ஓட்டங்களை குவித்து பெவிலியன் திரும்பினார் சுதர்ஷன். தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் 12 ஓட்டங்களில் கிளம்பினார். நிலைத்து ஆடிய கே.எல்.ராகுல் 56 ஓட்டங்களோடு கிளம்ப 36 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 168 ஓட்டங்களை சேர்ந்திருந்தது. அதன் பின்னர் வந்த வீரர்கள் தென் ஆபிரிக்க பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர்.

ரிங்கு சிங் 17 , குல்தீப் யாதவ் 1 , அக்சர் படேல் 7, அர்ஷ்தீப் சிங் 18 என சொற்ப ஓட்டங்களில் திணறியது இந்திய அணி. 46.2ஆவது ஓவரில் அவேஷ் கான் 9 ஓட்டங்களில் ரன்அவுட்டாக இந்திய அணி 211 இற்கு ஆல் அவுட்டானது. தென் ஆபிரிக்கா தரப்பில், நந்த்ரே பர்கர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், லிசாட் வில்லயம்ஸ், ஏய்டன் மார்க்ரம் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

India Vs South Africa 2nd ODI: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT