Saturday, April 20, 2024
Home » கீழ் வளிமண்டலத்தில் தளம்பல்: நாட்டில் தொடர்ந்தும் மழை நிலை

கீழ் வளிமண்டலத்தில் தளம்பல்: நாட்டில் தொடர்ந்தும் மழை நிலை

- வடக்கு, கிழக்கு, ஊவா உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை

by Rizwan Segu Mohideen
December 17, 2023 7:54 am 0 comment

– பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை

இலங்கைக்கு அருகில் உள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாடு முழுவதும் மழை நிலைமை தொடரும் என எதிர்பாரக்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (17) வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கான சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT