Thursday, April 25, 2024
Home » முத்து ஐயன்கட்டுக் குளத்தின் 4 வான் கதவுகள் திறப்பு

முத்து ஐயன்கட்டுக் குளத்தின் 4 வான் கதவுகள் திறப்பு

- மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

by Prashahini
December 16, 2023 6:35 pm 0 comment

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்து ஐயன்கட்டு குள்ளத்திற்கான நீர்வரத்து அதிகரித்திருக்கின்ற நிலையில் குளத்தின் 4 கதவுகள் இன்று (16) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

24 அடி கொள்ளளவு கொண்ட முத்து ஐயன்கட்டுக் குளத்தில் 23 அடி 3 அங்குல நீர்மட்டம் காணப்படுகிறது. நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் 2 வான் கதவுகள் 6 அங்குலத்துக்கும் 2 வான் கதவுகள் 3 அங்குலத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளன.

 

இன்று காலை முத்து ஐயன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் திருமதி மஞ்சுளா ஜொய்ஸ்குமார் அழைப்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அருளம்பலம் உமா மகேஸ்வரன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி, மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் நவரட்ணம் சுதாகரன், ஒட்டுசுட்டான் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் இ. ரமேஸ், முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு வான் கதவுகளை திறந்து வைத்தனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன், முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் காணப்படுவதாகவும் அனைத்து குளங்களும் அதன் உச்ச கொள்ளளவை அடைந்துள்ளதாகவும் தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் தெரிவித்தார்.

மாங்குளம் குரூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT