Friday, March 29, 2024
Home » பள்ளிவாசலுக்குள் இஸ்ரேலிய இராணுவத்தினர் அத்துமீறல்

பள்ளிவாசலுக்குள் இஸ்ரேலிய இராணுவத்தினர் அத்துமீறல்

by gayan
December 16, 2023 8:42 am 0 comment

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரான ஜெனினில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இஸ்ரேலிய துருப்புகள் யூத மத பிரார்த்தனையை ஒலிக்கும் வீடியோ வெளியானதை அடுத்து இஸ்ரேலிய படையினர் சிலர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகத்தில் பரவிய இந்த வீடியோவில் படையினர் பள்ளிவாசலுக்குள் இருப்பதும் அவர்களில் ஒருவர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி, முஸ்லிம்களின் தொழுகைக்கான அழைப்புப் போன்று யூத வாசகங்களை ஒலிப்பதும் பதிவாகியுள்ளது.

அதனை வீடியோ எடுக்கும் நபரும் சிரித்தபடி அந்த வாசகங்களை ஒலிக்கிறார். அந்தப் படை வீரர்கள் தமது பாதணிகளுடன் பள்ளிவாசலுக்குள் இருப்பதும் தெரிகிறது. பலஸ்தீன வெளியுறவு அமைச்சு இதற்கு கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் படை வீரர்கள் குறித்த இராணுவ நடவடிக்கையில் இருந்து உடன் நீக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. ஜெனினில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் சுற்றிவளைப்பு தேடுதல்களின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சுற்றிவளைப்புகளில் குறைந்தது 12 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT