Saturday, April 20, 2024
Home » யாழுக்கு விஜயம் மேற்கொண்ட மூன்று நாட்டு தூதுவர்கள்

யாழுக்கு விஜயம் மேற்கொண்ட மூன்று நாட்டு தூதுவர்கள்

- இராணுவ தளபதியை சந்தித்து கலந்துரையாடல்

by Prashahini
December 15, 2023 3:27 pm 0 comment

சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று (14) விஜயம் செய்தனர்.

சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வால்ட், ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி மற்றும் தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் சடைல் ஷால்க் ஆகியோர் பலாலியில் அமைந்துள்ள பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு சென்று யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்பின் போது, இராணுவ ஒத்துழைப்பு, சமூக நலத்திட்டங்கள், அபிவிருத்தி உதவிகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக அறிய முடிகிறது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT