Friday, April 19, 2024
Home » கீரிமலை ஜனாதிபதி மாளிகை காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு

கீரிமலை ஜனாதிபதி மாளிகை காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு

- திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்து போராட்டம்

by Prashahini
December 15, 2023 2:10 pm 0 comment

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று (15) அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 29 ஏக்கர் நிலம் அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.விசேட நிருபர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT