Thursday, April 25, 2024
Home » பதக்கங்களை குவித்த கம்பளை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள்

பதக்கங்களை குவித்த கம்பளை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள்

by sachintha
December 15, 2023 12:59 pm 0 comment

விளையாட்டமைச்சின் 68ஆவது விளையாட்டாக பதிவு செய்யப்பட்டுள்ள பிரான்சு சவாட் கிக் பாக்ஸிங் விளையாட்டானது கம்பளை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 2021ஆம் ஆண்டு கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் விளையாட்டு துறைத் தலைவர் எம்.என்.எம். நிம்ஷாட்டின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் அதிபர் ஏ.எல்.எஸ். சிராஜினால் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு பொறுப்பாசிரியராக பிரதி அதிபர் டீ.எம்.எப். மூவி நியமிக்கப்பட்டு விளையாட்டமைச்சின் தேசிய சம்மேளனத்தின் உப தலைவர் டீ.எம். நாவ்ஷாத் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டு 10 மாணவர்களுடன் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து பல சர்வதேச தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்தனர்.

அதேபோல் இம்முறை நாவலப்பிட்டி ஜயதிலக்க மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை மட்டத்திலான சுப பைட்டர் போட்டியில் பங்குபற்றி 29 தங்கப் பதக்கத்தையும், 08 வெள்ளி பதக்கத்தையும், 01 வெண்கல பதக்கத்தையும் பெற்று முதலிடத்தை தனதாக்கி கொண்டனர்.

கம்பளை ஸாஹிரா கல்லூரி அதிபர் ஐ. எ. எம். அப்சான் மற்றும் நிர்வாகம் மற்றும் கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெர்ணான்டோ தலைமையில் கெளரவிப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT