பங்களாதேஷ் பிரிமீயர் லீக்: ஸ்மித் அணி 63 ஓட்டங்களுக்குள் சுருண்டது | தினகரன்

பங்களாதேஷ் பிரிமீயர் லீக்: ஸ்மித் அணி 63 ஓட்டங்களுக்குள் சுருண்டது

பங்களாதேஷ் பிரிமீயர் ரி 20 லீக்கில் மோர்தசாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்மித் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் 63 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பங்களாதேஷில் பங்களாதேஷ் பிரிமீயர் லீக் ரி 20 கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் டாக்காவில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் ஸ்மித் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் - மோர்தசா தலைமையிலான ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வென்ற ரங்க்பூர் ரைடர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கொமிலா விக்டோரியன்ஸ் அணியின் தமிம் இக்பால், லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மோர்தசாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கொமிலா அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது.

தமிம் இக்பால் 4 ஓட்டங்களிலும், லெவிஸ் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் ஓட்டங்களிலும் ,ஸ்மித் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் 18 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது கொமிலா அணி தத்தளித்தது.

அதன்பின் நஸ்முல் இஸ்லாம் சிறப்பாக பந்து வீச கொமிலா விக்டோரியன்ஸ் அணி 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 63 ஓட்டங்களில் சுருண்டது. மோர்தசா நான்கு ஒவரில் 11 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். நஸ்முல் இஸ்லாம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 63 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ரங்க்பூர் ரைடர்ஸ் 12 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Add new comment

Or log in with...