Saturday, April 27, 2024
Home » இலங்கை Royal Common Wealth சங்கம் ஏற்பாடு செய்த வினா விடை போட்டி

இலங்கை Royal Common Wealth சங்கம் ஏற்பாடு செய்த வினா விடை போட்டி

by mahesh
December 13, 2023 1:30 pm 0 comment

இலங்கை Royal Common Wealth சங்கம் ஏற்பாடு செய்த வினா விடை போட்டி நிகழ்ச்சி கொழும்பு கிரேண்ட் ஒரிஎண்டல் ஹோட்டலில் சங்கத்தின் தலைவர் இப்திகார் அஸீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் Tareq Md Ariful Islam பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் Tareq Md Ariful Islam அவர்களால் சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் பரிசு வவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டன. போட்டிகளில் இரண்டாமிடம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஏற்பாட்டுக் குழுத் தலைவி தில்ருக்ஷினி குலத்திங்க, சங்கத்தின் செயலாளர் செல்வி நிஷானி குணசேகர, உதவிச் செயலாளர் நிபுனிகா அடிகாரி, பொருளாளர் ரொஹான் விக்டோரியா, உபதலைவர் ஆர். கதிர்காமராஜா, உதவிப் பொருளாளர் மர்ஷத் பாரி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ருஸைக் பாரூக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT