Friday, March 29, 2024
Home » சுயாதீன ஆணைக்குழுவின், இடைக்கால செயலக செயற்பாடுகள் யாழில் முன்னெடுப்பு
உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க

சுயாதீன ஆணைக்குழுவின், இடைக்கால செயலக செயற்பாடுகள் யாழில் முன்னெடுப்பு

by damith
December 11, 2023 10:18 am 0 comment

ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய, பாராளுமன்ற சட்டத்தினூடாக ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான உத்தேச சுயாதீன ஆணைக்குழுவின், இடைக்கால செயலகத்தின் அங்கத்தவர்கள், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை, கொழும்பிலுள்ள வாசஸ்தலத்தில் நேற்று முன்தினம் (09.12.2023) சந்தித்து கலந்துரையாடினர். உத்தேச சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி அசங்க குணவன்ச, இடைக்கால செயலகத்தின் கொள்கை பிரிவு தலைவர் கலாநிதி யுவி தங்கராஜா, இடைக்கால செயலகத்தின் சட்டப்பிரிவு உத்தியோகஸ்தர் நிசாந்தெனி ரத்னம், நீதி அமைச்சரின் சட்ட ஆலோசகர் அஸ்வினி அப்பங்கம, உள்ளிட்ட குழுவினர் கௌரவ ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை பிரஜைகளின் முறைப்பாடுகள் தொடர்பில் உண்மையை உறுதி செய்யும் வகையில் நல்லிணக்கம், இழப்பீடுகள் மற்றும் நிலையான அமைதிக்குத் தேவையான வசதிகளை வழங்குவதே உத்தேச சுயாதீன ஆணைக்குழுவின் முக்கிய நோக்கமாக உள்ளது.

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான சுயாதீன ஆணைக்குழுவிற்கு தேவையான சட்டம் மற்றும் கொள்கை கட்டமைப்பு, செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் பணிகளை வட மாகாணத்தில் முன்னெடுப்பது தொடர்பில் குறித்த குழுவினர் வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT