ஈரானில் தற்கொலை தாக்குதல்: மூவர் பலி; 24 பேருக்கு காயம் | தினகரன்

ஈரானில் தற்கொலை தாக்குதல்: மூவர் பலி; 24 பேருக்கு காயம்

ஈரானின் தென்கிழக்கு துறைமுக நகரான சபஹாரில் பொலிஸ் தலைமையக கட்டிடத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

ஷியா பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானின் சுன்னி முஸ்லிம்கள் அதிகம் வாழும் சிஸ்தான் பலுகிஸ்தான் பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலின்பேது துப்பாக்கிச் சூடும் இடம்பெற்றதாக தொலைக்காட்சி செய்தி ஒன்று குறிப்பிட்டுள்ளது. இங்கு போதைக் கடத்தல் பிரிவினைவாத வன்முறைகள் அதிகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் தலைமையகத்தில் நின்ற தற்கொலைதாரி குண்டை வெடிக்கச் செய்திருப்பதாக சபஹாரின் பதில் ஆளுநர் ரஹ்மதல் பமரியா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒப்டோபரில் 12 ஈரானிய எல்லைக் காவல் படையினரை ஜெயிஷ் அல் அத்ல் பிரிவினைவாதிகள் கடத்திச் சென்றதோடு இவர்களில் இதுவரை ஐவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிஸ்தான் பலுகிஸ்தான் பிராந்தியத்தில் சுன்னி பிரிவினைவாத குழு ஈரானிய பாதுகாப்பு படையினர் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இவ்வாறான தாக்குதலில் 2017 ஆம் ஆண்டு 10 எல்லை காவல் படையினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...